நாட்டில் தொழிற்கல்வி வியாபாரமயமாகி இருப்பதைத் தடுக்கத் தவறியதாக அகில இந்திய தொழிற்கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) மீது நாடாளுமன்ற நிலைக்குழு சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த வெள்ளிக்கிழமை மக்களவையில், ஏஐசிடிஇ-யின் செயல்பாடு குறித்த ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது.
தொழிற்கல்வியை - அதை அளிக்கும் தனி யார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளை - அந் நிறுவனங்கள் வழங்கும் பாடப்பிரிவுகள் - வசூ லிக்கும் கட்டணங்கள் - அந்நிறுவனங்களின் கட்டமைப்பு வசதிகள் என பல அம்சங்களை யும் நெறிப்படுத்த வேண்டிய மிக முக்கியமான தனது கடமையை ஏஐசிடிஇ ஒழுங்காகச் செய்யவில்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது.
கல்வித்துறையில், குறிப்பாக உயர்கல்வித் துறையில், அரசு படிப்படியாக தனது கட்டுப் பாட்டைத் தளர்த்திக் கொண்டதன் விளைவாக, கடந்த சுமார் 15 ஆண்டுகளில் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல் லூரிகள், ஐடிஐகள், கலை-அறிவியல் கல்லூரி கள், தனியார் சுயநிதிப் பல்கலைக்கழகங்கள் என ஆயிரக்கணக்கில் காளான்கள் போல முளைத்துவிட்டன.
குறிப்பாக தென்னிந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில், ஒன்றுக்குப்பத்தாக கொள்ளை லாபம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தோடு தொழிலதிபர்கள் பலரும் கல்வி வியாபாரத்தில் முதலீடு செய்து வருகிறார்கள்.
ஏழை, எளிய மாணவர் களுக்கு இங்கு இட மில்லை, அவர்களால், இந்தக் கல்லூரிகளில் விண்ணப்பப்படிவம் கூட வாங்க முடியாது. எந்த வரையறைக்கும் உட்படாமல், எவர் கல்லூரி ஆரம்பித்தாலும், ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்றது என்று போர்டு போட்டுக் கொள்கிறார்கள்.
அப்படியானால், ஏஐசிடிஇ என்னதான் செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழு வதைத் தடுக்க முடியாது. அதைத்தான், நாடாளு மன்ற நிலைக்குழுவும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரி களில் இடம்பெறுவதற்காக, உரிய பாடப்பிரிவு களைப் பெறுவதற்காக மாணவர்களும், பெற் றோர்களும் அலையோ அலை என்று அலைய வேண்டிய கொடுமை. தனியார் சுயநிதிக் கல் லூரிகளில் வரைமுறையற்ற கட்டணம் வசூல், இதை ஒழுங்குபடுத்த (ராமன் கமிட்டி போன்ற) கமிட்டிகள் அமைத்தால் அதை எதிர்த்து வழக்கு போடும் தனியார் கல்லூரி நிர்வாகங்கள் என அழிச்சாட்டியம் தொடர்கிறது.
ஒவ்வோராண்டும் இப்பிரச்சனைகள் எழு கிறபோது, தொழிற்கல்வி யார் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு நிலைமைகள் செல்கின்றன.
ஆனால், இவற்றைக் கட்டுப்படுத்த, சகல அதிகாரமும் படைத்த ஏஐசிடிஇ, வெறும் பார்வையாளராகவே இருக்க முடியாது என் பதைத்தான், நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை அறிவுறுத்தியுள்ளது.
கல்வி என்பது ஒரு உரிமையே என்பதை மறுத்து, காசு உள்ளவர்களுக்கு மட்டும் உயர் கல்வி என்ற நிலையை அரசும், தனியார் கல்வி நிறுவன முதலாளிகளும் உருவாக்கியுள்ள நிலையில், அரசு தொழிற்கல்லூரிகளின் தேவை குறித்தும், அவற்றின் தரத்தை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்த வேண்டிய அவ சியம் தற்போது ஏஐசிடிஇ-க்கு ஏற்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment