Thursday, December 25, 2008

நான் சைக்கிள் ஓட்டியே தீருவேன் தோழர்

வேலை.தமிழக இளைஞர்களின் தீராத பிரச்சனையாக தொடர்கிறது இந்த வார்த்தை. வேலை கொடு அல்லது நிவாரணம் கொடு என்ற கோரிக்கையில் துவங்கி, இன்றைக்கு சமூக பாதுகாப்புடன் வேலை கொடு என்ற முழக்கத்துடன் கடந்த 30 ஆண்டு காலமாக தமிழ்நாட்டின் நீள அகலத்தை சைக்கிள்களால் கடந்து, இளைஞர்களை தட்டியெழுப்பிய ஒரு இயக்கம் உண்டென்றால் அது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மட்டுமே.1978ல் சோசலிட் வாலிபர் முன்னணி (எ.ஒய்.எப்) குமரியிலிருந்தும் கோவையிலிருந்தும் சென்னை நோக்கி சைக்கிள் பிரச்சாரம் நடத்தியது. 1992ல் வேலையில்லா கால நிவாரணம் கோரி சென்னை நோக்கியும், 1997ல் தென் மாவட்டங்களில் சாதிக்கலவரம் ஏற்பட்டபோது அமைதியை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கியும், 2008ல் சேதுகால்வாயை வலியுறுத்தி தென் மாவட்டங்களிலிருந்து ராமேவரம் நோக்கியும் சைக்கிள் பிரச்சாரம் நடத்திய வாலிபர்சங்கம், தற்போது குமரி, கோவை, இராமேவரத்திலிருந்து சென்னை நோக்கி தமிழகம் முழுவதும் வெண்கொடி ஏந்தி முழக்கமிட்டு முன்னேறிச்சென்று கொண்டிருக்கிறது.கோவையிலிருந்து மாநிலத்தலைவர் எ.ஜி.ரமேபாபு தலைமையிலும், குமரியிலிருந்து மாநிலச்செயலாளர் எ.கண்ணன் தலைமையிலும், ராமேவரத்திலிருந்து மாநில துணைச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தலைமையிலும் சென்று கொண்டிருக்கும் இந்த வெண்கொடிப்படை 28ம் தேதி சென்னையில் சங்கமிக்கின்றன. வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பை பெற்றுச்செல்லும் இந்தக்குழுக்களில், சுயநலம் பாராமல், தனது குடும்பம், தனது உறவினர்களின் நலனை பற்றி எண்ணாமல், தமிழகத்தில் வேலையின்றி தவிக்கும் அரைக்கோடி இளைஞர்களின் குடும்பங்களுக்காக கால்கடுக்க சைக்கிள் மிதித்துச்செல்லும் இளைஞர்களில் படித்தறிந்த வழக்கறிஞர்கள் உண்டு; அன்றாட கூலி வேலை செய்தால் மட்டுமே வீட்டில் அடுப்பெறியும் என்கிற நிலையில் இருக்கும் இளைஞர்களும் உண்டு; உடல்நிலை சரியில்லை என்ற போதிலும், அதை மறைத்து, நான் சைக்கிள் ஓட்டியே தீருவேன் தோழர் என்று விடாப்பிடியாக சைக்கிள் ஓட்டும் இளம் பெண்களும் உண்டு; டிச.13ஆம் தேதி துவங்கி டிச.28ஆம் தேதி வரை 15 நாட்கள் சம்பளம் கிடைக்காது, வீட்டுக்கு காசுதர முடியாது என்று தெரிந்தும்கூட சென்னை வரை நாங்கள் வந்தே தீருவோம் என்று தாங்களாகவே முன்வந்த தோழர்களும் உண்டு; தனது சித்தப்பா இறந்துபோனபோதிலும் கூட, பயணத்திலிருந்து விலக விரும்பவில்லை என்று கூறி தொடரும் தோழனும் உண்டு; கடும் வெயிலிலும், மாலை ஆனதும் செவிப்பறையைக் கிழிக்கும் குளிர்காற்றிலும் சைக்கிள் மிதித்தாலும், வரவேற்பு கொடுக்குமிடத்தில் சற்று கூட ஓய்வெடுக்காமல் பம்பரமாய் சுழன்று பொதுமக்களிடம் பிரசுரம் விற்பது, உண்டியலில் நிதி திரட்டுவது என தொடர்கிறது இந்த இளைஞர் படையின் பெரும்பயணம்.குமரியில் துவங்கி திருச்சியை கடந்துவிட்டோம் எனக்குறிப்பிட்ட மாநிலச்செயலாளர் எ.கண்ணன், இதுவரை சுமார் 600 கி.மீ தூர பயணத்தில் 85க்கும் அதிகமான இடங்களில் வாலிபர்சங்கத்தினர் மட்டுமின்றி, கமல்ஹாசன், அஜீத், விஜய் ரசிகர் மன்றங்களைச் சேர்ந்தவர்கள், ஆதித்தமிழர் அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஐயப்பபக்தர்கள் என பல்வேறு தரப்பினரும் உற்சாக வரவேற்பளித்தனர் என்றார். குறிப்பாக பெண்கள் எங்கள் பயணத்தை பேராதரவுடன் வாழ்த்தி வரவேற்றனர். வேலை வேண்டும், அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுமென்று பிரச்சாரக்கூட்டத்தில் பல்வேறு ஆதாரங்களுடன் எங்கள் தோழர்கள் பேசியதை தலையசைத்து ஆமோதித்த ஏராளமான தாய்மார்களை காணமுடிந்தது. அது அவர்களது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியது என்று குறிப்பிட்ட அவர், பல இடங்களில் சாலையில் சைக்கிள் மிதித்து கொண்டிருந்த எங்களை வழியில் கார்களில் செல்வோர், இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிறுத்தி பழங்கள், பிகட்டுகள், குடிநீர் என தாங்களாகவே முன்வந்து, எந்த அறிமுகமும் இன்றி வாங்கிக்கொடுத்து வாழ்த்தினார்கள் என்று பெருமிதம் பொங்க கூறினார்.மதுரை மாவட்டம் திருவாலவாயநல்லூரில் இலாமிய ஜமாத்தைச் சேர்ந்தவர்களின் வரவேற்பு,வாடிப்பட்டியில் பொய்க்கால்குதிரை ஆட்டம், மேளதாளம், தீபம் மற்றும் அன்னை தெரசா மகளிர் குழுக்களின் வரவேற்பு கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலுமே சிஐடியு, விவசாயிகள், மாதர், மாணவர் சங்கங்களின் சகோதர வரவேற்பு என வழிநெடுகிலும் சைக்கிள் ஓட்டிய களைப்பை மறக்கச்செய்த உற்சாகம் தொடர்கிறது.கோவையில் துவங்கி 500 கி.மீ தூரம் பயணம் செய்து வேலூர் மாவட்டம் ஆரணியை அடைந்துவிட்ட எ.ஜி.ரமேஷ்பாபு தலைமையிலான சைக்கிள் பயணக்குழுவிற்கு சுமார் 90 இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.இந்தப்பயணத்தில் பங்கேற்றுள்ள 32 இளைஞர்களும், தமிழகச் சாலைகளில் மிக உயரமான இடத்தில் இருக்கும் சாலையாக கருதப்படும் தர்மபுரி மாவட்டம் தொப்பூர்மேடு பகுதியில் சைக்கிள் மிதிக்கும்போது மிகவும் சிரமப்பட்டார்கள் எனக்குறிப்பிட்ட அவர், நாமக்கல் பகுதியிலும் மலையை ஒட்டி அமைந்துள்ள சாலைகள் சைக்கிள் பயணத்திற்கு சவாலாகவே இருந்தது என்றாலும், விவசாயத்தொழிலாளர்களும், பெண்களும் பெருமளவில் திரண்டு நின்று அளித்த வரவேற்பு எங்கள் களைப்பை காணாமல் போகச்செய்தது என்றார்.ராமேவரத்தில் துவங்கி தமிழக கடலோர மாவட்டங்கள் வழியாகவே சுமார் 420 கி.மீ பயணம் மேற்கொண்டு கடலூரை நெருங்கியுள்ள ஆர்.வேல்முருகன் தலைமையிலான குழு முதல் ஐந்துநாட்கள் முழுக்க முழுக்க கனமழையில் நனைந்துகொண்டே மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டது என்பது நினைவுகூரத்தக்கது. மழையில் நனைந்தபோதிலும் உற்சாகம் குன்றாமல் வந்த இக்குழுவினர் வெள்ளச்சேதம் ஏற்பட்ட காவேரி டெல்டா மாவட்டங்களின் உண்மையை நிலையை வழி நெடுக நேரில் காணும் வாய்ப்பை பெற்றனர். விவசாயத் தொழிலாளர்கள் படும்பாடு, இந்த மாவட்டங்களில் வெள்ளத்தாலும், மழையின்மையாலும் மாறி மாறி துயரத்தை அனுபவிக்கும் விவசாயி வீட்டு பிள்ளைகளுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்தை கண்கூடாகக் காட்டியது என்று வேல்முருகன் குறிப்பிட்டார். திருவாரூர், நாகை மாவட்டங்களில் கிராமம் கிராமமாக திரண்டு நின்று மக்கள் வரவேற்பளித்தனர் எனக்குறிப்பிட்ட அவர் நூற்றுக்கும்மேற்பட்ட மையங்களில் வெகுசிறப்பான வரவேற்பு நிகழ்ச்சிகள் நடந்தன என்றும் கூறினார்.மூன்று குழுக்களும் சென்னையில் சந்திக்கும்போது, தமிழகம் முழுவதையும் அலசிவிட்டு ஏராளமான அனுபவங்களைப்பெற்ற இளைஞர்களாக, தமிழகத்தின் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வழிகாட்டும் தலைவர்களாக மாறியிருப்பார்கள் என்றால் அது மிகையல்ல.

Monday, December 15, 2008

காலத்தே எழுந்த கேள்விக்கு பதில் என்ன?

நாட்டில் தொழிற்கல்வி வியாபாரமயமாகி இருப்பதைத் தடுக்கத் தவறியதாக அகில இந்திய தொழிற்கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) மீது நாடாளுமன்ற நிலைக்குழு சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த வெள்ளிக்கிழமை மக்களவையில், ஏஐசிடிஇ-யின் செயல்பாடு குறித்த ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது.
தொழிற்கல்வியை - அதை அளிக்கும் தனி யார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளை - அந் நிறுவனங்கள் வழங்கும் பாடப்பிரிவுகள் - வசூ லிக்கும் கட்டணங்கள் - அந்நிறுவனங்களின் கட்டமைப்பு வசதிகள் என பல அம்சங்களை யும் நெறிப்படுத்த வேண்டிய மிக முக்கியமான தனது கடமையை ஏஐசிடிஇ ஒழுங்காகச் செய்யவில்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது.
கல்வித்துறையில், குறிப்பாக உயர்கல்வித் துறையில், அரசு படிப்படியாக தனது கட்டுப் பாட்டைத் தளர்த்திக் கொண்டதன் விளைவாக, கடந்த சுமார் 15 ஆண்டுகளில் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல் லூரிகள், ஐடிஐகள், கலை-அறிவியல் கல்லூரி கள், தனியார் சுயநிதிப் பல்கலைக்கழகங்கள் என ஆயிரக்கணக்கில் காளான்கள் போல முளைத்துவிட்டன.
குறிப்பாக தென்னிந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில், ஒன்றுக்குப்பத்தாக கொள்ளை லாபம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தோடு தொழிலதிபர்கள் பலரும் கல்வி வியாபாரத்தில் முதலீடு செய்து வருகிறார்கள்.
ஏழை, எளிய மாணவர் களுக்கு இங்கு இட மில்லை, அவர்களால், இந்தக் கல்லூரிகளில் விண்ணப்பப்படிவம் கூட வாங்க முடியாது. எந்த வரையறைக்கும் உட்படாமல், எவர் கல்லூரி ஆரம்பித்தாலும், ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்றது என்று போர்டு போட்டுக் கொள்கிறார்கள்.
அப்படியானால், ஏஐசிடிஇ என்னதான் செய்து கொண்டிருக்கிறது என்ற கேள்வி எழு வதைத் தடுக்க முடியாது. அதைத்தான், நாடாளு மன்ற நிலைக்குழுவும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரி களில் இடம்பெறுவதற்காக, உரிய பாடப்பிரிவு களைப் பெறுவதற்காக மாணவர்களும், பெற் றோர்களும் அலையோ அலை என்று அலைய வேண்டிய கொடுமை. தனியார் சுயநிதிக் கல் லூரிகளில் வரைமுறையற்ற கட்டணம் வசூல், இதை ஒழுங்குபடுத்த (ராமன் கமிட்டி போன்ற) கமிட்டிகள் அமைத்தால் அதை எதிர்த்து வழக்கு போடும் தனியார் கல்லூரி நிர்வாகங்கள் என அழிச்சாட்டியம் தொடர்கிறது.
ஒவ்வோராண்டும் இப்பிரச்சனைகள் எழு கிறபோது, தொழிற்கல்வி யார் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு நிலைமைகள் செல்கின்றன.
ஆனால், இவற்றைக் கட்டுப்படுத்த, சகல அதிகாரமும் படைத்த ஏஐசிடிஇ, வெறும் பார்வையாளராகவே இருக்க முடியாது என் பதைத்தான், நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை அறிவுறுத்தியுள்ளது.
கல்வி என்பது ஒரு உரிமையே என்பதை மறுத்து, காசு உள்ளவர்களுக்கு மட்டும் உயர் கல்வி என்ற நிலையை அரசும், தனியார் கல்வி நிறுவன முதலாளிகளும் உருவாக்கியுள்ள நிலையில், அரசு தொழிற்கல்லூரிகளின் தேவை குறித்தும், அவற்றின் தரத்தை மேம்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்த வேண்டிய அவ சியம் தற்போது ஏஐசிடிஇ-க்கு ஏற்பட்டுள்ளது

Friday, December 12, 2008

பூ தந்தால் புறக்கணிப்பா?

சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி உள் ளிட்ட அனைத்து சட்டக்கல்லூரிகளிலும் புதனன்று தேர்வுகள் துவங்கின.பெரும்வன்முறைச் சம்பவத்திற்குப் பிறகு, தமிழகமே அதைப்பார்த்து அதிர்ந்து போன சூழலில் ஒத்திவைக்கப் பட்ட தேர்வுகள் தற்போது துவங்கியுள்ளன. கல்விக் கூடங்கள் சமத்துவத்தின் இருப்பிடங்கள், அங்கு சாதியச் சிந்தனைக்கோ, வெறிக்கோ, வன்முறைக்கோ இட மில்லை என்பதை தொடர்ந்து வலியுறுத்தி இயங்கிவரும் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள், சென் னை அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் தேர்வு எழுதவந்த அனைத்து மாணவர்களுக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றிருக்கிறார்கள். மாணவர்களிடையே, ஒற்றுமை உணர்வு வலுப்படட்டும் என்ற முழக்கத்துடன் நடந்துள்ள இந்த நிகழ்வை படம் பிடிக்க எந்த டி.வி. கேமராவும் வர வில்லை. தீக்கதிர் தவிர, எந்த பத்திரிகையிலும் மீடியாவிலும் இப்படியொரு வரவேற்பு நடந்ததாகக்கூட பதிவாகவில்லை. இதே பத்திரிகைகளும், 24 மணிநேர செய்தி சேனல் களும்தான், சட்டக்கல்லூரி மாணவர்களின் கொடிய வன் முறையை இடைவிடாமல் ஒளிபரப்பிக்கொண்டே இருந் தன. தமிழகத்தையே பெரும் பீதிக்குள்ளாக்கின.வன்முறையை திரும்பத்திரும்ப ஒளிபரப்பிய மீடியாக் கள், அதே கல்லூரியில் ஒற்றுமையை ஏற்படுத்தும் மாணவர் சங்கத்தின் சீரிய முயற்சியை ஒளிபரப்பவில்லை.இதுதான் வன்முறையை காசாக்கத் தெரிந்த முதலாளித் துவ மீடியாக்களின் பத்திரிகை தர்மம்!
-எஸ்.பி.ஆர்

அலைமோதும் இளைய தமிழகம்




சொர்க்கபுரி என்று அழைக்கப் பட்ட அமெரிக்காவே, பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தாக்குதலால் ஆடிப்போயுள்ளது. நவம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 60 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக செய்திகள் அலறுகின் றன. மொத்தத்தில் தற்போது வரை சுமார் 1கோடிக்கும் அதிகமானோரின் வேலை பறிக்கப்பட்டு வீதிக்கு வந்துவிட்டார்கள்.
நெருக்கடியின் கடும் எதிரொலி எந்த நாட்டையும், விட்டுவைக்கவில் லை. குறிப்பாக இந்திய இளைஞர்கள் அதிகமாக செல்லும், துபாய், சவூதி அரேபியா போன்ற வளைகுடா நாடுக ளும், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுக ளும் இனி வராதீர்கள் என்று சொல்லா மல் சொல்லத் துவங்கி விட்டன. கடைசி யாக சில மாதங்களுக்குமுன்னால் துபாய்க்கு வேலைக்குச் சென்ற தமிழக இளைஞர்கள் பெறுகிற சம்பளம் வெறும் 250 தினார்கள்தானாம். இதன் இந்திய மதிப்பு வெறும் ரூ.5000 மட்டும்தான். வெறும் ரூ.5000 சம்பாதிப்பதற்கு, மனை வியை விட்டு, குழந்தைகளை விட்டு, வீட்டைவிட்டு, நாட்டைவிட்டு பிரிந்தி ருக்க வேண்டிய கொடுமை.
மெத்தப்படித்த இளைஞர்களின் அமெரிக்கக் கனவுகளும், ஓளரவு படித்துக் கற்றுக்கொண்ட கிராமப்புற இளைஞர்களின் வளைகுடா நாடுகள் கனவும் பொய்த்துக் கொண்டிருக்கிறது.
சரி, வெளிநாடுகளில்தான் நிலைமை இப்படியென்றால், உள்நாட்டில்...?
தமிழ்நாட்டின் வேலையின்மைக் கொடுமையை 5 நிமிடத்தில் அனுபவப் பூர்வமாக உணரவேண்டுமானால், சனி, ஞாயிறு கிழமைகளில் மதுரை ஆரப் பாளையம் ப நிலையத்திற்குச் செல்ல வேண்டும். நகர முடியாது, திருப்பூருக்கும் கோயம்புத்தூருக்கும் பெட்டிகளோடு குடும்பம் குடும்பமாக, கூட்டம் கூட்ட மாக, ஆயிரமாயிரம் மக்கள், பெண்கள், இளைஞர்கள், பேருந்தைப்பிடிக்க ஓட்ட மாய் ஓடும் காட்சியே சாட்சி. எவர் முகத்திலும் மகிழ்ச்சியைக் காண முடி யாது. குடும்பத்தைப் பிரிந்து வந்த மிரட்சி; வேலை கிடைக்குமோ, கிடைக்காதோ என்கிற மருட்சி; ஏற்கெனவே வேலை செய்பவர்களாக இருந்தால், என்னத்த என்கிற விரக்தி. தென் தமிழகமே புலம் பெயர்ந்து போவது போல் இருக்கும்.
ஆனால், உலக நெருக்கடியின் கொடிய கரங்கள் திருப்பூர் பின்னலாடைத் தொழி லையும் கோவை பொறியியல் தொழிலை யும் பாதிக்கத் துவங்கியுள்ளதாக வரும் செய்திகள், இம்மக்களைக் கலங்க வைத்துள்ளது.
மற்றொருபுறம், சென்னைக்கும், பெங்களூருக்கும் படையெடுக்கும் படித்த இளைஞர்கள் ஆயிரமாயிரம், ஏற்கெனவே ஐ.டி. நிறுவனங்களில் வேலையில் இருப்பவர்களுக்கே பிங்க்கார்டு எனப்படும் இளஞ்சிவப்பு கார்டு களைக் கொடுத்து வெளியில் விரட்டிக் கொண்டிருக்கிறார்கள். பிங்க்கார்டு என்றால், நாளையிலிருந்து நீ இங்கு வரவேண்டியதில்லை என்பதை நாகரிகமாக சொல்வதாகும். வேலை யில்லை என்பதை எப்படி சொன்னால் என்ன?
மொத்தத்தில், அமெரிக்காவும் இல் லை; துபாயும் இல்லை; திருப்பூரும் இல்லை; சென்னையும் இல்லை. படித்த, படிக்காத, படித்துக் கொண்டிருக்கிற இளைஞர்களின் எதிர்காலம் சூனிய மாகத்தெரிகிற கொடுமை.
தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்ப கங்களில் பதிந்து வைத்திருக்கிற இளை ஞர்களின் எண்ணிக்கை 48 லட்சம். இவர்களில் ஆண்டுக்கு சுமார் 12 ஆயிரம் பேர் முதல் 14 ஆயிரம் பேர் வரை ஏதோ ஒரு வேலைவாய்ப்பைப் பெறுகிறார்கள். பதிவு செய்தவர்களில் சுமார் 20 லட்சம் பேர் பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள்; 10.54 லட்சம் பேர் மிகவும் பிற்படுத் தப்பட்ட இளைஞர்கள், 11.98 லட்சம் பேர் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பதவிகளுக்கு அரசு தேர்வு நடத்தியது. மொத்தம் 2500 இடங்கள், விண்ணப் பித்தவர்கள் 7 லட்சம் பேர்.
இப்படித்தான் ராணுவ ஆளெடுப் பிலும் சரி, போலீ ஆளெடுப்பிலும் சரி, வெறும் ரூ.3000 கிடைக்கிற சாதாரண அத்தக்கூலி வேலையானாலும் சரி.. அலைமோதுகிறது இளைய தமிழகம்.
அலுவலக வாயில்களில், ஆலை வாயில்களில், ஐ.டி. கம்பெனி வாயில் களில் காத்துக்கொண்டே இருக்கிற இளைஞர்களின் சோகம் சொல்ல முடியாதது.
8 வருடத்திற்கு முன்னால் டிஎம்இ (னுஆநு) படித்தேன், கம்ப்யூட்டர் தெரியும், ஆட்டோ கேட் (ஹருகூடீ ஊஹனு) படித்துள் ளேன். பர்ட் கிளாஸில் பாஸாகியுள் ளேன் என்று சான்றிதழ்களை நீட்டி னால், ஐயோ, இது இப்படி பிரயோஜனப் படாதே, நீங்க ஆட்டோ கேட் (ஹருகூடீ ஊஹனு) 2009, படிங்க, ஞசுடீ-நு படிச்சிட்டு வாங்க என்று திருப்பியனுப்புகிற போது எழுகிற வேதனையை வெளிப்படுத்த முடியாது.
பத்தாண்டுக்கு முன்னால் பட்டம் பெற்றவர்கள், எட்டாண்டுக்கு முன்னால் பட்டயம் பெற்றவர்கள், ஐந்தாண்டுக்கு முன்னால் ஐ.டி. பயின்றவர்கள் என எல்லோரும் வாய்ப்புகளைத் தேடிக் கொண்டேயிருக்கிறார்கள்.
சரி. வாய்ப்புகள் இல்லையா? வாய்ப் புகளை உருவாக்க முடியாதா? முடியும். அரசால் முடியும். அரசின் சகலதுறை களிலும் கடைநிலை ஊழியர்கள் முதல் உயரதிகாரிகள் வரை பல்லாயிரக்கணக் கான பணியிடங்கள் காலியாகவே உள் ளன. பள்ளிக்கூடங்களில் ஆயிரக்கணக் கில் பணியிடங்கள் காலியாகவே உள் ளன. இவை தவிர, தமிழகம் முழுவதும் அரசு கவனம் செலுத்தாத ஏராளமான தொழில்கள் உள்ளன.
டெக்டைல், பழச்சாறு, வாசனைத் திரவியங்கள், கயிறு உற்பத்தி, மீன் உணவு பதப்படுத்துதல் போன்றவை துவங்கி கருப்பட்டி உற்பத்தி, தீப்பெட்டி உற்பத்தி, பால் உற்பத்தி, பாத்திரங்கள் உற்பத்தி என அந்தந்த பகுதிகள் சார்ந்த சிறு தொழில்களை, குடிசைத் தொழில்களை அழியாமல் பாதுகாக்க வேண்டிய அவ சியம் உள்ளது.
சேதுக்கால்வாய்த்திட்டம் செயல் படத் துவங்கினால், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தூத்துக் குடி மாவட்டங்களில் இருந்து புலம் பெயரும் அவலம் ஓரளவுக்கு முடிவுக்கு வரும்.
தற்போது நடைமுறையில் உள்ள கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தை நகர்ப்புறங்களுக்கும் விரிவு படுத்தினால், ஏற்கெனவே அமலாகும் கிராமப்புறங்களில் ஆண்டுக்கு 100 நாட்கள் உறுதியாக வேலை கொடுத்தால், இந்த வேலைகளில் உள்ளாட்சி அமைப் புகளை இணைத்து சரியாக கண் காணித்தால், பிரம்மாண்டமான திட்டங் களை அரசு சாதிக்க முடியும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழகத் தின், இந்தியாவின் முதுகெலும்பு விவ சாயம். ஆனால் தங்களது விவசாயத் தந் தைகள்படும் பாட்டைப்பார்த்து இளைய தலைமுறை அதிலிருந்து விலகிச் செல் கிறது. அவர்கள் விலகிச் சொல்வதற் காகவே காத்திருந்தது போல, குமரி முதல் சென்னைவரை கிடைக்கிற நிலத்தை யெல்லாம் விலைகொடுத்து வாங்கி ரியல் எடேட்களாக்கி வருகின்றன நிலக் கொள்ளைக் கும்பல்கள். அழிந்துவரும் விவசாயத்தின் மீது இளைய தலை முறைக்கு நம்பிக்கை ஏற்படுத்த என்ன செய்யப்போகிறது அரசு? நவீன விவசா யம், அதை முறையாக செய்து லாபம் ஈட்டுவதற்கான தொழில்நுட்ப அறிவை வழங்குதல், ஒருவேளை பொய்த்துப் போனால் பயிர்க்காப்பீடு, அனைத்துக் கும்மேல் விவசாயத்தின் மீது, ஆர்வத்தை வரவழைக்க நிலமற்ற ஏழை விவசாயி களுக்கு நிலம் கொடுப்பது, 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலத்தை பிரித்தளிப்பது முக்கியமானது.
இவற்றையெல்லாம் செய்தால் மட் டுமே, வேலைகள் பெருகும், இளைஞர்க ளிடம், குடும்பங்களிடம் பணம் புழங்கும். அந்தப்பணம் சந்தைக்கு வரும். தேவை அதிகரிக்கும், பொருள் உற்பத்தி அதி கரிக்கும், பொருளாதாரம் சரியான திசை யில் சுழலும்.
இதுதான், இன்றைக்குத் துவங்குகிற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலம் தழுவிய சைக்கிள் பிரச்சாரப் பயணத்தின் இலக்கு.
ஏற்கெனவே, சேதுக்கால்வாய்க்காக இராமேவரம் நோக்கிச் சென்ற வாலிபர் சங்கச் சைக்கிள்களின் சக்கரங்கள், தற்போது சென்னை நோக்கிச் சுழலத் துவங்குகின்றன. சுழற்சி வெல்லட்டும்!